"உலகைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்"
வாசிப்புநேரம் -

படம்: AFP/Johannes Eisele
ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் பசி பட்டினிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும்படி உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கு மாறவும் பாலினச் சமத்துவ உரிமைகளை நிலைநாட்டவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திரு. குட்டெரெஸ் கேட்டுக்கொண்டார்.
நீடித்த நிலைத்தன்மை வளர்ச்சி இலக்குகள் தொடர்பான மாநாட்டில் அவர் பேசினார்.
உலக நாடுகள் 8 ஆண்டுகளுக்கு முன்பு வகுத்த இலக்குகளை இன்னமும் எட்டாமல் இருப்பதாகத் திரு. குட்டெரெஸ் கூறினார்.
உலகைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.
சுகாதாரம், முன்னேற்றம், வாய்ப்புகள் நிறைந்த உலகை உருவாக்கத் தலைவர்கள் உறுதிபூண்டதை அவர் சுட்டினார்.
யாரும் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொண்டு அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்ளக் கடப்பாடு தெரிவித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த வாக்குறுதிகள் மக்களுக்குக் கொடுக்கப்பட்டவை என்பதை வலியுறுத்தினார் திரு. குட்டெரெஸ்.
இலக்குகளில் 15 விழுக்காட்டை எட்ட மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கூடுதலாக ஆண்டுக்கு அரை டிரில்லியன் டாலர் நிதி ஆதரவைக் கேட்டுள்ளது ஐக்கிய நாட்டு நிறுவனம்.
மெதுவடைந்திருக்கும் முயற்சிகளை முடுக்கிவிட அந்த நிதி உதவும் என்று அது நம்புகிறது.

ஆதாரம் : AGENCIES