Skip to main content
மலேசியக் காற்பந்து வீரர்களுக்கு விதித்த தடை நியாயமில்லை: FIFPro
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியக் காற்பந்து வீரர்களுக்கு விதித்த தடை நியாயமில்லை: FIFPro

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் தேசியக் காற்பந்துக் குழுவில் விளையாடத் தகுதி பெறாத வெளிநாட்டவர், அந்தச் சர்ச்சையில் பாதிக்கப்பட்டவர்கள் என்று FIFPro எனும் உலகக் காற்பந்து வீரர்களுக்கான தொழிற்சங்கம் தற்காத்துப் பேசியுள்ளது.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுத் தடை அளவுக்கு அதிகமானது என்று அது கூறியது.

ஜூன் மாதத்தில் வியட்நாமுக்கு எதிராக விளையாடிய மலேசிய அணியில் 7 பேர் மலேசியாவில் பிறந்த விளையாட்டாளர்கள் அல்லர் என்பதால் சர்ச்சை தொடங்கியது.

விளையாட்டாளர்கள் தேசிய அணியில் தகுதிபெறுவதற்கு அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி மலேசியாவில் பிறந்திருக்க வேண்டும்.

ஆனால் 7 பேரும் மலேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

காற்பந்து வீரர்களுக்கு முழு ஆதரவு தருவதாய் FIFPro தெரிவித்தது.

அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்றும்,
அனைத்துக் காற்பந்து தொடர்பான நடவடிக்கைகளிலிருந்தும் அவர்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்றும் அது குறிப்பிட்டது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்