தண்ணீர் நிர்வாகம் குறித்த அனைத்துலகக் குழுவின் இணைத்தலைவராக மூத்த அமைச்சர் தர்மன்

Twitter/The Global Commission on the Economics of Water
அனைத்துலகத் தண்ணீர் நிர்வாகமுறையை மாற்றியமைப்பதற்கு உலகப் பொருளியல் கருத்தரங்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஈராண்டுத் திட்டத்தின் இணைத்தலைவராக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்றுள்ளார்.
சமூகத் தலைவர்களும் நிபுணர்களும் அடங்கிய 17 பேர் திட்டத்தை வழிநடத்துவர்.
திட்டத்தில் பருவநிலை மாற்றம், அனைத்துலக நெருக்கடிகள் ஆகியவற்றில் தண்ணீரின் முக்கியப் பங்கும் தண்ணீர் நிர்வாகமும் மறுஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
தண்ணீரை எங்கும் எளிதில் பெற வகைசெய்வதற்கு நிதி, புத்தாக்கம் மீதான முதலீடுகளைச் செயல்படுத்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளதாகத் திரு. தர்மன் சொன்னார்.
பிரச்சினையைத் தீர்க்க ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதைக் கவனிக்கவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; கழிவு நிர்வாகத்திற்கும் அதிகச் செலவாகும் என்று திரு தர்மன் கூறினார்.