Skip to main content
கோவா தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கோவா தீ - தீவிர விசாரணை

வாசிப்புநேரம் -
கோவா தீ - தீவிர விசாரணை
படம்: AFP
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீயில் 25 பேர் மாண்டனர்.

நள்ளிரவில் விடுதியின் எரிவாயுக் கலன் (gas cylinder) வெடித்ததால் நெருப்புப் பரவியதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதைக் காவல்துறை நிராகரித்தது.

காவல்துறை மும்முரமான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

தீச்சம்பவத்தில் மாண்டோரில் பெரும்பாலோர் விடுதியின் ஊழியர்கள். சில சுற்றுப்பயணிகளும் உயிரிழந்தனர்.

மாண்டோரின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.

விடுதி தீப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பவம் குறித்து தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் அனுதாபமும் ஆதரவும் தெரிவித்தார்.

இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத்தலம் கோவா. டிசம்பர் மாதம் அங்கு அதிகமானோர் சுற்றுலா செல்வது வழக்கம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்