முஸ்லிம் நண்பர்கள் நோன்பு துறக்க காயமுற்றது போல் நடித்து ஆட்டத்தை நிறுத்திய காற்பந்து வீரர்
வாசிப்புநேரம் -
பிரான்ஸில் நடந்த Ligue 1 காற்பந்து ஆட்டத்தில் வீரர் ஒருவர் காயமுற்றது போல் நடித்து ஆட்டத்தை நிறுத்தியிருக்கிறார்.
அவர் நோட் (Nantes) காற்பந்து அணியைச் சேர்ந்த ஆன்ட்டனி லோபெஸ் (Anthony Lopes).
லோபெஸ் ஆட்டத்தைத் திசை திருப்ப அவ்வாறு செய்யவில்லை.
தம் அணியினர் நோன்பு திறப்பதற்கு நேரம் ஒதுக்கித் தர அவர் முயன்றார்.
பிரான்ஸில், ஒருவர் சமயக் கோட்பாடுகளைக் காரணங்காட்டி காற்பந்து விளையாட்டை நிறுத்தி வைக்கமுடியாது.
அதனால் லோபெஸ் காயமுற்றதாகக் கூறி ஆட்டத்தை நிறுத்தினார்.
பொதுவாக, காற்பந்து வீரர்கள் காயமடைந்தால் அவர்கள் திடலுக்கு வெளியே சென்று மருத்துவ உதவி பெறுவார்கள்.
ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.
ஆனால் லோபெஸ் கோல் காவலர் (goalkeeper) என்பதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர்கள் திடலுக்குள் சென்றனர்.
அந்த வேளையில் அவரது சக வீரர்கள் பேரீச்சம்பழம் சாப்பிட்டு நோன்பு துறந்தனர்.
அந்தக் காட்சி இணையவாசிகளைப் பரவலாக ஈர்த்தது.

ஆதாரம் : Others