Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"எவ்வளவு நீளமான காதுகள்! கண்பட்டுவிடப் போகிறது, என் ஆட்டுக்குட்டிக்கு!"

வாசிப்புநேரம் -

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில், மிக நீளமானக் காதுகளைக் கொண்ட ஓர் ஆட்டுக்குட்டி ஊடக நட்சத்திரமாக மாறியுள்ளது.

கடந்த மாதம் பிறந்த சிம்பா என்றழைக்கப்படும் அதன் காதுகளின் நீளம்... 54 சென்டிமீட்டர்!

(Asif HASSAN / AFP)
(Asif HASSAN / AFP)

சிம்பாவின் உரிமையாளர் முகமது ஹசன் நரேஜோ (Mohammad Hasan Narejo) கின்னஸ் உலகச் சாதனை அமைப்பை அணுகி சிம்பாவை 'எக்காலத்திலும் ஆகச் சிறந்த சாதனை'ப் (Greatest Of All Time) பட்டியலில் ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். 

ஆனால், "ஆக நீண்ட காதுகளைக் கொண்ட ஆடு" என்ற சாதனை வகை தற்போது அமைப்பின் இணையப்பக்கத்தில் இல்லை. 

ஆட்டுக்குட்டி பிறந்த 10 முதல் 12 நாள்களுக்குள் அது அனைத்து தேசிய, அனைத்துலக ஊடகங்களில் தோன்றியதாகவும் அழகுப் போட்டி ஒன்றில் வெற்றிபெற்றதாகவும் நரேஜோ கூறினார். 

போட்டியில் சிம்பா, மற்ற ஆடுகளுடைய உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுபற்றி நரேஜோ எச்சரிக்கையாக இருப்பதாகச் சொன்னார்.

அதுகுறித்து, மற்றவர்களின் தீய எண்ணங்களை அகற்ற அவர் சிம்பாவிற்கு குரான் (Quran) வசனங்களை ஓதுவதாகவும் நரேஜோ குறிப்பிட்டார். 

சிம்பா தன்னுடைய நீளமான காதுகளை
வசதியாகச் சுமக்க , நரேஜோ அதன் கழுத்தில் ஒரு சாதனத்தை வடிவமைத்துள்ளார்.

பாகிஸ்தானைச் சிறந்த ஆட்டு வளர்ப்பு தேசமாக விளம்பரப்படுத்த, சிம்பாவை ஒரு முன்னுதாரணமாக வளர்க்கத் திட்டமிடுவதாகவும் நரேஜோ தெரிவித்தார். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்