Skip to main content
கட்டுமானத் தளத்தில் தங்கப் புதையல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கட்டுமானத் தளத்தில் தங்கப் புதையல்

வாசிப்புநேரம் -
கட்டுமானத் தளத்தில் தங்கப் புதையல்

Facebook/Lokale Politie Dendermonde

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 16 Aug 2026 03:35PM புதுப்பிப்பு : 18 Aug 2026 12:06PM

பெல்ஜியத்தின் டன்டமோண்ட (Dendermonde) நகரில் புதுப்பிப்புப் பணி தங்கத் தேடலாக மாறியது.

ஊழியர்கள் அறநிறுவனக் கட்டடம் ஒன்றில் வடிகால் செயல்முறையை அமைக்க வேண்டியிருந்தது.

சுவர்களின் செங்கற்களுக்குள் இருந்தது தங்கப் புதையல்!

50 தங்கக் கட்டிகள்...தங்கக் காசுக்கள்...

அவற்றின் மொத்த மதிப்பு 9 மில்லியன் யூரோ (13.3 மில்லியன் வெள்ளி) இருக்கக்கூடும்!

தங்கத்தைக் கண்ட ஊழியர்களால் தங்களின் கண்களை நம்பமுடியவில்லை.

அவர்கள் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர்.

அதிகாரிகள் உடனடியாகத் தங்கத்தை மீட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்தனர்.

Related article image
Facebook/Lokale Politie Dendermonde

தங்கத்தின் சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை.

அதை உரியவரிடம் கொண்டுசேர்க்க விரும்புவதாக அதிகாரிகள் கூறினர்.

கட்டுமானத் தளத்தில் இன்னும் புதையல் இருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். பொதுமக்கள் அங்கிருந்து விலகியிருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்