Skip to main content
தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்

வாசிப்புநேரம் -
தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கிரீன்லந்தைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) எச்சரித்திருந்தார்.

மீண்டும் வர்த்தகப் போர் குறித்த அச்சம் எழுந்துள்ளதால் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

  • ஓர் அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) தங்கம் - சுமார் 4,690 டாலர் (சுமார் 6,030 வெள்ளி)
  • சிங்கப்பூரில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை சுமார் 188 வெள்ளி.
  • ஓர் அவுன்ஸ் வெள்ளி - சுமார் 94 டாலர் (121 வெள்ளி)
ஏற்கனவே நீடிக்கும் உலகளாவிய அரசியல் நெருக்கடி இன்னும் மோசமாகியுள்ளது.

தேசியப் பாதுகாப்பிற்காக அமெரிக்கா கிரீன்லந்தைக் கைப்பற்றியே தீரும் என்கிறார் திரு டிரம்ப்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் தேதியிலிருந்து கூடுதலாகப் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா அவ்வாறு செய்தால் உரிய பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்