ஜெமினை AI - ஒரு பில்லியன் பயனாளர்களைக் கடந்தது
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Andrew Kelly)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கூகள் நிறுவனத்தின் (Gemini ) 'ஜெமினை' செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மாதந்தோறும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு பில்லியனைக் கடந்துள்ளது.
கூகளின் மிக வேகமாக வளர்ச்சி காணும் மின்னிலக்க மென்பொருள் Gemini என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகளின் AI பிரிவில் பெரிய மாற்றங்கள் நடக்கும் நேரத்தில் அந்தச் சாதனை நடந்துள்ளது.
சில முக்கிய AI ஆய்வாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர்.
அதே நேரத்தில், அடுத்த கட்ட Gemini 3.5 Pro மென்பொருள் வெளியீடும் தாமதமானது.
AI போட்டி தற்போது மிகவும் கடுமையாக உள்ளது.
குறிப்பாக, கணினி நிரல் துறையில் பல நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஆனால் கூகளுக்கு பெரிய பலம் அதன் பயனாளர்கள்.
Search, Gmail, Maps, YouTube ஆகிய அனைத்துச் சேவைகளிலும் Gemini சீராக இணைக்கப்படுகிறது.
OpenAI சேவையின் பயனாளர்களும் ஒரு பில்லியனை எட்டியுள்ளது.
2022ஆம் ஆண்டு ChatGPT நிறுவனம் அதன் இலவச AI மென்பொருளை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பயனாளர்களை வசப்படுத்துவதில் போட்டாபோட்டி நிலவுகிறது.

ஆதாரம் : AFP