Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

76 மில்லியன் ஆண்டுப் பழைமையான டைனசார் எலும்புக்கூடு ஏலம்!

வாசிப்புநேரம் -

சுமார் 76 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு பூமியில் சுற்றித்திரிந்ததாக நம்பப்படும் டைனசாரின்  எலும்புக்கூடு இம்மாதம் நியூயார்க்கில் ஏலத்திற்கு விடப்படும் என்று Sotheby's  நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலும்புக்கூட்டுப் படிமம் Tyrannosaurus வகையின் உறவினரான கோர்கோசாரஸ் (Gorgosaurus) டைனசாருக்குச் சொந்தமானது.

அமெரிக்காவின் மொண்டானா (Montana) மாநிலத்தில் 2018-இல் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரமும் 6.7 மீட்டர் நீளமும் கொண்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட கோர்கோசாரஸ் எலும்புக்கூடுகள் அனைத்தும்
அருங்காட்சியகங்களில் உள்ளதாகவும் இக்குறிப்பிட்ட எலும்புக்கூடு மட்டுமே தனியார் உரிமைக்குக் கிடைக்கக்கூடியது என்றும் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தனது வாழ்க்கையில் பல தனித்துவமான பொருள்களை விற்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் சில பொருள்கள் மட்டுமே கோர்கோசொரஸ் எலும்புக்கூட்டைப் போல அதிகளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று Sotheby நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கூறினார்.

எலும்புக்கூடு 5 மில்லியன் டாலரிலிருந்து 8 மில்லியன் அமெரிக்க டாலர்வரை விலைபோகலாம் என்று Sotheby's மதிப்பிட்டுள்ளது. 

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்