Grand Canyon காட்டுத்தீ - சுற்றுப்பயணிகள் வெளியேற்றம்
வாசிப்புநேரம் -
(படம்: Daniel SLIM / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் Grand Canyon பள்ளத்தாக்கில் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயால் சில பகுதிகளில் சுற்றுப்பயணிகளும் குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன் North Rim எனப்படும் வடக்குப் பகுதியில் இருப்போர் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (10 ஜூலை) சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இம்மாதம் (ஜூலை) 4 ஆம் தேதியிலிருந்து Grand Canyon பள்ளத்தாக்கு Dragon Bravo என்றழைக்கப்படும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ மின்னல் காரணமாக மூண்டது.
Grand Canyon தேசியப் பூங்காவிற்கு வெளியே White Sage Fire எனப்படும் காட்டுத்தீ பரவுகிறது.
அதுவும் இம்மாதம் 9ஆம் தேதி மின்னல் தாக்கியதால் துவங்கியது.
சுமார் 4,400 ஹெக்டர் நிலம் தீக்கிரையானது.
Grand Canyon பள்ளத்தாக்கில் மலையேறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அங்குக் கடுமையான வெப்பமும் புகையும் நிலவுவதாக அவர்கள் கூறினர்.
சென்ற செவ்வாய்க்கிழமை (8 ஜூலை) அந்தப் பகுதியில் உள்ள ஆற்றுக்குச் செல்ல முயன்ற 67 வயது ஆடவர் ஒருவர் மாண்டார்.

ஆதாரம் : AFP