கல்லறையில் திருட்டு....கைப்பற்றப்பட்ட 100 மண்டையோடுகள்
This audio is generated by an AI tool.
பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி.
கைவிடப்பட்ட நிலையில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது ஒரு கார்.
அதன் பின்னிருக்கையில் எலும்புகள், மண்டையோடுகள்.
தோட்டத்தின் அடித்தளத்தில் போய்ப் பார்த்த போது அங்கு பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள்.
அதிர்ச்சியில் உறைந்து போயினர் காவல்துறையினர்.
சில மாத விசாரணைக்குப் பிறகு 100 மனித உடல் எச்சங்களைத் திருடிய சந்தேகத்தில் 34 வயது ஆடவரை அவர்கள் கைது செய்தனர்.
சந்தேக நபரின் வீட்டில் 100 மண்டையோடுகள், நீண்ட எலும்புகள், பதப்படுத்தப்பட்ட கைகள், கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நிலையில் கண்டறியப்பட்டன.
கொஞ்சம் நகைகளும் இருந்தன. அவை கல்லறைகளோடு தொடர்புடையவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
1855 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட கல்லறைத் தோட்டத்தைக் குறிவைத்துச் சந்தேக நபர் செயல்பட்டிருக்கலாம் என்கிறது காவல்துறை.
சந்தேக நபர் மீது 100 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் எவரும் அவருக்காக வாதாடியதாகத் தெரியவில்லை.