Skip to main content
90 வயது பட்டதாரி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

90 வயது பட்டதாரி

வாசிப்புநேரம் -
சாதிக்க வயது தடையல்ல என்பதை அயர்லந்தின் லண்டன்டரி (Londonderry) நகரைச் சேர்ந்த மேரியெட் மெக்ஃபர்லண்ட் (Maryette McFarland) என்பவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அவருக்கு வயது 90.

மேரியெட் இலக்கியத்தில் (English Literature) பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நேற்று (14 அக்டோபர்) நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட 300க்கும் அதிகமான பட்டதாரிகளில் அவரே ஆக வயதானவர்.

பட்டப்படிப்பை 90 வயதில் முடித்ததைத் தம்மால் நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை என மேரியெட் BBC செய்தியிடம் கூறியிருக்கிறார்.

தாயாரை நினைத்துப் பெருமைப்படுவதாக அவரது மூத்த மகள் ஷௌனா (Shauna) தெரிவித்தார்.

புதியனவற்றைக் கற்றுக்கொள்ளத் தயங்கும் வயதானவர்களிடம்,

"என்னால் முடிந்தால், எவர் வேண்டுமானாலும் செய்து காட்ட முடியும். வயது தடையல்ல," என மேரியெட் கூறினார்.

அவருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்