Skip to main content
இயற்கை எழில் கொஞ்சும் சண்டோரினியில் பதற்றம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இயற்கை எழில் கொஞ்சும் சண்டோரினியில் பதற்றம் - அமைதிக்கு அழைப்பு

வாசிப்புநேரம் -
இயற்கை எழில் கொஞ்சும் சண்டோரினியில் பதற்றம் - அமைதிக்கு அழைப்பு

(படம்: Aris Messinis / AFP)

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சொடாக்கிஸ் (Kyriakos Mitsotakis),
சுற்றுலாத் தீவான சண்டோரினியில் (Santorini) ஏற்பட்ட நில அதிர்வுகளைத் தொடர்ந்து அமைதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாட்டின் மற்ற தீவுகளும் பாதிக்கப்பட்டன.

பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அங்கிருந்த மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

சண்டோரினியிலிருந்து குடும்பங்கள் வெளியேற படகுகளும் கூடுதல் விமானச் சேவகைளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இயற்கை எழில் கொஞ்சும் பாறைகளுக்கும் குமுறாத எரிமலைக்கும் பெயர் பெற்ற சண்டோரினியையும் அதன் பக்கத்துத் தீவுகளையும் சென்ற வாரத்திலிருந்து நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் உலுக்கிவருகின்றன.

ஆகப் பெரிய நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 4.9ஆகப் பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பது முன்னுரைப்பு. அதனால் மீட்புக் குழுக்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பிரிட்டனும் பிரான்ஸும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்