Skip to main content
இஸ்ரேலுக்குச் செல்ல 100 ஆண்டுத் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இஸ்ரேலுக்குச் செல்ல 100 ஆண்டுத் தடை - வீடு திரும்பினார் தன்பர்க்

வாசிப்புநேரம் -
இஸ்ரேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட சமூக ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் (Greta Thunberg) சுவீடனுக்குத் திரும்பியுள்ளார்.

அவரோடு சேர்ந்து 12 பேர் கப்பல் வழி காஸாவிற்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல முயன்றனர்.

இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் கப்பலை வழிமறைத்தன.

தங்களை இஸ்ரேல் கடத்தியதாக 22 வயது கிரெட்டா குற்றஞ்சாட்டினார்.

காஸாவில் நடத்தப்படும் இனப்படுகொலையைப் பற்றி மக்கள் அமைதியாக இருப்பது அச்சமூட்டுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடர்ந்து போர்க் குற்றங்களைப் புரிவதாகவும் அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகவும் அவர் கூறினார்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இஸ்ரேல் மறுக்கிறது.

கப்பலில் இருந்த 12 பேரில் 8 பேர் இஸ்ரேலைவிட்டு வெளியேற மறுத்தனர்.

தன்பர்க் உட்பட 4 பேர் நாடு வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் அனைவர் மீதும் இஸ்ரேல் 100 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்