பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ஜெர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

(படம்: Federico Gambarini / DPA / AFP)
பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) ஜெர்மனி காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் மேற்கே உள்ள ஒரு கிராமத்தில் நிலக்கரிச் சுரங்கத்தை விரிவுபடுத்துவதை நிறுத்தவேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது.
சக ஆர்வலர்களுடன் சேர்ந்து துன்பெர்க் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் கைது செய்யப்படவில்லை; அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகு விடுவிக்கப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
போராட்டத்தின்போது தடுத்துவைக்கப்பட்ட அனைவரும் அடையாள அட்டை சோதிக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவர்.
அவர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படமாட்டாது என்றும் காவல்துறை தெரிவித்தது.