"ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டும்!"
வாசிப்புநேரம் -
கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது திரு ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் (Jagmeet Singh) கூறினார்.
திரு ட்ரூடோவின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.
எனவே சட்டங்களை நிறைவேற்றப் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு திரு ட்ரூடோவுக்குத் தேவை.
இக்கட்டான சூழலில் கனடாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
அடுத்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும் கனடிய இறக்குமதிக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்போவதாகத் திரு டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
கனடிய ஏற்றுமதியில் முக்கால்வாசி அமெரிக்காவுக்கே செல்கிறது.
இந்நிலையில், திரு ட்ரூடோ தம் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்திருக்கிறார்.
இந்த வாரத் தொடக்கத்தில் கனடியத் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான திருவாட்டி கிரிஸ்டியா ஃப்ரீலண்ட் (Chrystia Freeland) பதவி விலகினார். அதனால் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : Others