Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அரசதந்திரியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட இந்தியா, கனடா

வாசிப்புநேரம் -
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பூசல் காரணமாக இரண்டும் அவரவர் நாட்டிலுள்ள தூதர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன.

கனடிய சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கலாம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருந்தார்.

அது அபத்தமான குற்றச்சாட்டு எனக் கூறி இந்தியா அதை நிராகரித்தது.

கனடிய மண்ணில் செயல்படும் இந்திய எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அது கனடாவை வலியுறுத்தியது.

கனடாவின் மூத்த அரசதந்திரி கேமரன் மெக்கையை (Cameron MacKay) நாட்டைவிட்டு வெளியேற இந்தியா 5 நாள் கெடு விதித்துள்ளது.

இந்திய அரசதந்திரி ஒருவரைக் கனடா வெளியேற உத்தரவிட்ட சில மணிநேரத்தில் இந்தியாவின் அறிவிப்பு வெளியானது.

தனது உள்நாட்டு விவகாரத்தில், கனடாவின் தலையீடு அதிகரித்துவருவதாகப் புதுடில்லி கூறிவருகிறது.

ஒட்டாவாவின் அண்மை முடிவு அதையே பிரதிபலிப்பதாக இந்தியா குறிப்பிட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கியக் கோவிலுக்கு வெளியே ஜூன் 18 ஆம் தேதி திரு. நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான புதிய பூசல் குறித்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்