சீனாவில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம் - 13 கட்டடங்கள் தரைமட்டம்
படம்: cnsphoto via Reuters
சீனாவின் தென்மேற்கே உள்ள குவாங்ஸி (Guangxi) வட்டாரத்தை 5.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது.
இருவர் உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை.
நால்வர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் யாரின் உயிருக்கும் ஆபத்து இல்லை.
லியூசோவ் (Liuzhou) நகரிலிருந்து 7,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.
13 கட்டடங்கள் தரைமட்டமாயின.
தேடல், மீட்புப் பணி மும்முரமாய்த் தொடர்கிறது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
தொடர்பு, மின் கட்டமைப்புகள், தண்ணீர், எரிவாயு விநியோகம் ஆகியவை சீராக இயங்குவதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன.