Skip to main content
மெக்சிகோவின் வன்முறை நிறைந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிகோவின் வன்முறை நிறைந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் மாண்டனர்

வாசிப்புநேரம் -
மெக்சிகோவின் வன்முறை நிறைந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் மாண்டனர்

(படம்: envato.com)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மெக்சிகோவில் குவானாஹுடாட்டோ (Guanajuato) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் மாண்டனர். அவர்களில் ஐவர் பெண்கள்; எஞ்சிய மூவர் 3 ஆண்கள் என AFP செய்தி கூறுகிறது.

மாண்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

சம்பவம் கடந்த சனிக்கிழமை (22 பிப்ரவரி) இரவு
நடந்தது. குவானாஹுடாட்டோ (Guanajuato) மெக்சிகோவின் செழிப்பான தொழில்துறை நடுவமாகவும் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. அதே நேரம் மெக்சிகோவின் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகவும் அது கருதப்படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் ராணுவத்தைக் களமிறக்கியது. அன்றிலிருந்து தற்போதுவரை போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளில் 480,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்