Skip to main content
உலகின் ஆக அதிக மதிப்புள்ள T
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

உலகின் ஆக அதிக மதிப்புள்ள T-Rex எலும்புக்கூடு

வாசிப்புநேரம் -
உலகின் ஆக அதிக மதிப்புள்ள T-Rex எலும்புக்கூடு

படம்: AFP/Timothy A. Clary

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Tyrannosaurus Rex (T-Rex) ரகத்தைச் சேர்ந்த டைனஸோர் ஒன்றின் எலும்புக்கூடு 50.1 மில்லியன் டாலருக்கு (64.6 மில்லியன் வெள்ளிக்கு) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடைபெடறற ஏலத்தில் ஏழு பேர் அதனை வாங்கப் போட்டி போட்டனர்.

எலும்புக்கூட்டுக்கு கஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது.

T-Rexஇன் முழுமையடைந்த எலும்புக்கூடுகளில் கஸ்ஸும் ஒன்று.

கஸ்ஸின் புதைபடிவத்தில் (Fossil) 183 எலும்புகள் உள்ளன.

அது சுமார் 63 விழுக்காடு முழுமை பெற்றுள்ளது.

11.6 மீட்டர் நீளம் கொண்டது அந்த எலும்புக்கூடு.

உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆகப் பெரிய T-rex டைனஸோர்களில் அதுவும் ஒன்று.

அந்த டைனஸோர் சுமார் 72 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு சௌத் டக்கோட்டா பகுதியில் (South Dakota) கஸ்ஸின் புதைபடிவம் ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது.

இதற்குமுன் 2024ஆம் ஆண்டில் ஸ்டெகொஸோரஸ்ஸின் (Stegosaurus) புதைபடிவம் அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

அதன் விலை 44.6 மில்லியன் டாலர் (57.6 மில்லியன் வெள்ளி).
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்