Skip to main content
உணவகத்தில் சிறுநீர்ச் சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உணவகத்தில் சிறுநீர்ச் சம்பவம் - பல்லாயிரம் விருந்தினருக்கு இழப்பீடு

வாசிப்புநேரம் -
சீனாவில் ஷங்ஹாயில் (Shanghai) உள்ள Haidilao உணவகத்தில் சாப்பிட்ட விருந்தினர்களுக்கு இழப்பீடு வழங்கப் போவதாய் உணவகம் தெரிவித்துள்ளது.

4,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

உணவகத்திற்குச் சாப்பிட வந்த இருவர் சமைக்கப் பயன்படுத்தப்படும் சூப்பில் சிறுநீர் கழித்ததால் உணவகம் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

2 ஆடவர்கள்கள் உணவகத்தில் இருந்த தனிப்பட்ட அறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பிறகு அங்கிருந்த சூப்பில் அவர்கள் சிறுநீர் கழித்தனர்.

அதைக் காட்டும் காணொளி கடந்த மாதம் இறுதியில் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்தச் சம்பவம் பிப்ரவரி 24ஆம் தேதி நடந்ததாக Haidilao உணவகம் தெரிவித்தது.

ஆனால் அது குறித்து 4 நாள் கழித்துதான் தெரியவந்ததாக அது சொன்னது.

அந்தச் சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருப்பதை அறிவதாக உணவகம் குறிப்பிட்டது.

நடந்ததற்குப் பொறுப்பேற்க உணவகம் ஆன அனைத்தையும் செய்யும் என்று கூறியது.

சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாய் ஷங்ஹாய் காவல்துறை குறிப்பிட்டது.

உணவகம் அவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்