Skip to main content
பிணையாளிகள் இருவரின் காணொளியை வெளியிட்டிருக்கும் ஹமாஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிணையாளிகள் இருவரின் காணொளியை வெளியிட்டிருக்கும் ஹமாஸ்

வாசிப்புநேரம் -
பிணையாளிகள் இருவரின் காணொளியை வெளியிட்டிருக்கும் ஹமாஸ்

படம்: Reuters/Amir Cohen

இஸ்ரேலியப் பிணையாளிகள் இருவரின் காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

2023 அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தியபோது பிணை பிடிக்கப்பட்டோரில் அந்த இருவரும் அடங்குவர்.

தாமும் வேறு எட்டுப் பேரும் பிணையாளிகளாய் வைக்கப்பட்டிருப்பதாகக் காணொளியில் பிணையாளி திரு கய் கில்போ டலால் (Guy Gilboa-Dalal) கூறுகிறார். இன்னொரு பிணையாளி திரு அலோன் ஒஹெல் (Alon Ohel) காணொளியில் தெரிந்தார்.

இதற்கு முன்னர் ஹமாஸ் வெளியிட்ட பிணையாளிகளின் காணொளிகளுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அவற்றைக் கொள்கைப் பிரசாரங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

காஸாவை முழுமையாக வசப்படுத்துவதே பிணையாளிகளை மீட்டு வருவதற்கான ஒரே வழி என்று இஸ்ரேலியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமார் பென் கவீர் (Itamar Ben Gvir) கூறினார்.

ஹமாஸிடம் உள்ள 48 பிணையாளிகளில் 20 பேர் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்