பிணையாளிகளை விடுவிக்கத் தயார் - ஹமாஸ்
(படம்: Eyad BABA / AFP)
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சண்டை நிறுத்தத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு ஹமாஸ் அமைப்பு இணங்கியுள்ளது.
அதன் பிடியில் உள்ள பிணையாளிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பு சண்டை நிறுத்தத் திட்டத்துக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் தந்த திரு டிரம்ப் முடிவை வரவேற்றார்.
"ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி அது நீடித்து நிலைத்திருக்கும் அமைதிக்குத் தயாராக உள்ளது என்று நம்புகிறேன்," என்று அவர் Truth Social சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
எனினும் திரு டிரம்ப்பின் சண்டை நிறுத்தத் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் இன்னும் இணங்கவில்லை.
இஸ்ரேல் கட்டங்கட்டமாக காஸா வட்டாரத்திலிருந்து வெளியேறுவது...ஹமாஸ் ஆயுதங்களைக் களைவது போன்றவை இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் காஸா வட்டாரத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என்று திரு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
தோழமை நாடான இஸ்ரேலிடம் அவர் அவ்வாறு கூறியிருப்பது இதுவே முதல்முறை.