காஸா சண்டை நிறுத்தம் - பரிந்துரைகளை ஏற்கும்படி ஹமாஸுக்கு வலியுறுத்தல்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Ramadan Abed
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காஸா சண்டை நிறுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்காவின் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோப் (Steve Witkoff) ஹமாஸை வலியுறுத்தியுள்ளார்.
அதன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் இந்த வாரம் தொடங்கலாம் என்றும் அவர் கூறினார். இஸ்ரேலியப் பிணையாளிகளில் பாதிப் பேரை விடுவிப்பது, மாண்ட பிணையாளிகளின் உடல்களை ஒப்படைப்பது, 60 நாள் சண்டை நிறுத்தம் ஆகிய முடிவுகள் எட்டப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
திரு விட்கோப் முன்வைத்த பரிந்துரைகளைத் தாங்கள் நிராகரிக்கவில்லை என்று ஹமாஸ் கூறியிருக்கிறது.
ஆனால் தங்களது கோரிக்கைகளை அது மீண்டும் முன்வைத்தது.
நிரந்தரச் சண்டை நிறுத்தத்துக்கு உறுதியளிக்கும் அக்கோரிக்கைகளில்
காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வெளியேற வேண்டும்; தடையற்ற உதவிகள் கிடைக்க வேண்டும் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் ஹமாஸின் இந்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை.