Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹன்ட்டாவைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக்கப்பல் ஸ்பெயின் செல்கிறது

வாசிப்புநேரம் -
ஹன்ட்டாவைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக்கப்பல் ஸ்பெயின் செல்கிறது

படம்: AFP

ஹன்ட்டாவைரஸால் (hantavirus) பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகள் வரும் 11ஆம் தேதி முதல் கனரி தீவுகளில் வெளியேற்றப்படுவர்.

ஸ்பெயின் உள்துறை அமைச்சு அதைத் தெரிவித்தது.

பயணிகள், தங்கள் விமானங்கள் வரும்வரை கப்பலிலேயே இருப்பர்.

கப்பலில் இருந்த பயணிகள் மூவர் ஹன்ட்டாவைரஸால் மாண்டனர்.

அவர்களில் இருவர் நெதர்லந்தைச் சேர்ந்த தம்பதி.

அவர்களுக்குக் கப்பலில் ஹன்ட்டாவைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர் ஒருவர் கூறினார்.

மாண்ட இருவரும் சிலி, உருகுவே, அர்ஜென்டினா வழியாகப் பயணம் செய்திருந்ததாக அர்ஜென்டினா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கப்பலிலிருந்து மேலும் மூவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டனர்.

கப்பலில் ஹன்ட்டாவைரஸ் மனிதர்களுக்கு இடையே பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் கோவிட்-19 நோய்த்தொற்று போல் ஹன்ட்டாவைரஸ் உலகெங்கும் பரவும் அபாயம் குறைவு என்று நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) தெரிவித்தார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்