ஹன்ட்டாவைரஸ் என்றால் என்ன?
வாசிப்புநேரம் -
படம்: AP Photo/Misper Apawu
மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் உல்லாசக் கப்பல் ஒன்றில் ஹன்ட்டாவைரஸ் (hantavirus) பரவியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதில் பயணம் செய்த மூவர் மாண்டனர்.
அவர்களில் ஒருவருக்கு எலிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஹன்ட்டாவைரஸ் நோய் உறுதிசெய்யப்பட்டது.
ஹன்ட்டாவைரஸ் - அப்படி என்றால்?
இந்தக் கிருமி முதன்முதலில் கொரியாவில் உள்ள ஹன்ட்டான் நதி (Hantaan River) வட்டாரத்தில் கண்டறியப்பட்டது.
அதனாலேயே இதற்கு 'ஹன்ட்டாவைரஸ்' என்று பெயர் வந்தது.
எலிகள், பிற கொறித்துண்ணிகள் (Rodents) இந்தக் கிருமியைச் சுமந்து செல்கின்றன.
பாதிக்கப்பட்ட எலிகளின் எச்சில், சிறுநீர் அல்லது அவற்றின் கழிவுகளுடன் மனிதர்களுக்கு நேரடித் தொடர்பு ஏற்படும்போது அந்த நோய் பரவுகிறது.
எப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது?
1993ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அந்தக் கிருமி முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.
அதன் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டது.
அது ஒரு அரிய வகை நோய், மிகவும் ஆபத்தானது.
குறிப்பாக இந்த நோய்க்கிருமி சிறுநீரகங்கள், இதயம் அல்லது நுரையீரலைப் பாதிக்கும்போது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
அறிகுறிகள்?
அறிகுறிகள் பொதுவாக இரண்டு கட்டங்களாகத் தோன்றும்.
ஆரம்பகால அறிகுறிகள்
அதிகப்படியான சோர்வு, காய்ச்சல்.
தசை வலி - குறிப்பாகத் தொடை, இடுப்பு, முதுகு, தோள்பட்டை போன்றவற்றில் வலி அதிகமாக இருக்கும்.
பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேருக்குத் தலைவலி, தலைச்சுற்றல், நடுக்கத்துடன் கூடிய குளிர், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவையும் இருக்கும்.
பிந்தைய அறிகுறிகள்
நோய் பாதித்து 4 முதல் 10 நாள்களுக்குப் பிறகு, தீவிரமான அறிகுறிகள் தென்படும்.
நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்வதால் கடுமையான இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.
நோய் மனிதருக்கு மனிதர் பரவுமா?
பொதுவாக இந்த நோய் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
ஹன்ட்டாவைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவது மிகவும் அபூர்வம்.
இருப்பினும், தற்போது கேப் வெர்டே (Cape Verde) கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உல்லாசக் கப்பலில், மனிதர்களுக்கு இடையே இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, 'ஆண்டிஸ் வைரஸ்' எனப்படும் ஓர் அரிய வகை ஹன்ட்டாவைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்தக் குறிப்பிட்ட வகை கிருமி மிக அரிதாக மனிதர்களிடையே பரவும் தன்மையைக் கொண்டது.
நோய்க்குச் சிகிச்சை உள்ளதா?
இப்போதைக்குச் சிகிச்சை எதுவும் இல்லை.

ஆதாரம் : Mediacorp Seithi