ஹன்ட்டாவைரஸ் பரவிய சொகுசுக்கப்பலின் பயணம் முடிவுக்கு வருகிறது
படம்: JORGE GUERRERO / AFP
ஹன்ட்டாவைரஸ் (Hantavirus) தொற்று பரவிய சொகுசுக்கப்பல் இன்று நெதர்லந்தின் (Netherlands) ரோட்டர்டாம் (Rotterdam) நகரைச் சென்றடையும்.
அத்துடன் அதன் பயணம் ஒரு முடிவுக்கு வரும்.
கப்பலில் எஞ்சியிருக்கும் சிப்பந்திகள் சில வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
'MV Hondius' கப்பல் ரோட்டர்டாம் துறைமுகத்தில் அணையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு கப்பலில் எஞ்சியிருக்கும் 25 சிப்பந்திகளும் இரண்டு மருத்துவப் பணியாளர்களும் தரையிறங்குவர்.
கப்பலில் பரவிய தொற்று காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்தனர்.
இருப்பினும், இது கோவிட் பெருந்தொற்றைப் போன்றது அல்ல என்றும் மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்றும் உலகச் சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருக்கிறது.
பெரிய அளவில் நோய்த்தொற்று பரவத் தொடங்கும் என்பதற்கு எந்தவோர் அறிகுறியும் இல்லை என நிறுவனம் சொன்னது.