Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சொகுசுக்கப்பலில் ஹண்ட்டாவைரஸ் மனிதர்களுக்கு இடையே பரவுவதாகச் சந்தேகம்

வாசிப்புநேரம் -
உலகச் சுகாதார நிறுவனம் MV Hondius சொகுசுக் கப்பலில் ஹண்ட்டாவைரஸ் (hantavirus) கிருமி மனிதர்களிடையே பரவுவதாகச் சந்தேகிக்கிறது.

கிருமி அவ்வாறு பரவுவது அரிது.

அது பெரும்பாலும் எலிகளால் பரவும்.

அந்தக் கப்பலில் 7 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது அல்லது கிருமி தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மூவர் மாண்டனர்.

அவசர சிகிச்சை தேவைப்படும் மூவர் விரைவில் மருத்துவ உதவி விமானம் வழி நெதர்லந்துக்கு அனுப்பப்படுவர்.

கப்பலில் புதிதாக யாருக்கும் கிருமியின் அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கப்பலில் 150 பயணிகளும் 61 சிப்பந்திகளும் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கேப் வெர்டே நாட்டிற்கு அருகே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் கிருமி பரவக்கூடும் என்ற அச்சத்தால் அவர்கள் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

கப்பல் ஸ்பெயினின் கனரி தீவுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அங்குப் பயணிகளும் சிப்பந்திகளும் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று ஸ்பெயினின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்