Skip to main content
10 நிமிட முடிவு... நேப்பாளத்தில் 900 மாணவர்கள் உயிர்தப்பினர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

10 நிமிட முடிவு... நேப்பாளத்தில் 900 மாணவர்கள் உயிர்தப்பினர்

வாசிப்புநேரம் -
10 நிமிட முடிவு... நேப்பாளத்தில் 900 மாணவர்கள் உயிர்தப்பினர்

படம்: Manan VATSYAYANA / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளப் பெருவெள்ளத்திலிருந்து ஒரு தலைமையாசிரியர் 900 மாணவர்களைக் காப்பாற்றியுள்ளார்.

வெள்ளம் வருவதைப் பற்றி முன்கூட்டியே நால்வரிடமிருந்து எச்சரிக்கை கிடைத்ததாக ராஜேந்திரா டாவாடி (Rajendra Dawadi) சொன்னார்.

அவர் உடனே வகுப்புகளை நிறுத்தி, மாணவர்களை உயரமான இடத்திற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்.

நுவாகோட்டில் (Nuwakot) உள்ள திரிபுவன் திரிசூலி (Tribhuvan Trishuli) உயர்நிலைப்பள்ளியில் 1,600 மாணவர்கள் பயில்கின்றனர்.

பள்ளியைவிட்டு வெளியேறும் வேளையில், ஆற்றிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் விடுதிக் கட்டடம் ஒன்று வெள்ளப் பெருக்கில் மூழ்கியதைப் பார்த்ததாக டாவாடி தெரிவித்தார்.

"10 நிமிடங்கள் தாமதமாக முடிவெடுத்திருந்தாலும்கூட மாணவர்கள், உட்பட நாங்கள் அனைவரும் இன்று உங்களிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம்," என்று அவர் BBC செய்தித்தளத்திடம் சொன்னார்.

16 வயது யுனிஷா, தமது நண்பர்களுடன் 10 வினாடிகளில் உயிர்தப்பியதாகக் கூறினார்.

இதுவரை, குறைந்தது 69 பள்ளிக்கூடங்கள் வெள்ளத்தால் சேதமடைந்ததாக Save the Children அமைப்பு தெரிவித்துள்ளது.

19,000 பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேப்பாள வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 750ஐத் தாண்டியது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்