Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வௌவால்கள் மூலம் பரவும் Nipah கிருமி கடுமையான தொற்றுநோயாக உருவெடுக்கும் சாத்தியம் - சுகாதார வல்லுநர்கள்

வௌவால்கள் மூலம் பரவும் Nipah கிருமி கடுமையான தொற்றுநோயாக உருவெடுக்கும் சாத்தியம் இருப்பதாகச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
வௌவால்கள் மூலம் பரவும் Nipah கிருமி கடுமையான தொற்றுநோயாக உருவெடுக்கும் சாத்தியம் - சுகாதார வல்லுநர்கள்

படம்: AFP/Biju Boro

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

வௌவால்கள் மூலம் பரவும் Nipah கிருமி கடுமையான தொற்றுநோயாக உருவெடுக்கும் சாத்தியம் இருப்பதாகச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

20ஆண்டுக்கு முன்னர் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் Nipah கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.

தெற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் அது ஏற்கனவே பலரைப் பாதித்திருந்தாலும், Nipah கிருமித் தொற்றுக்கான தடுப்பு மருந்தோ, சிகிச்சைக்கான மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Nipah கிருமித் தொற்று தொடர்பான 2 நாள் கருத்தரங்கில் வல்லுநர்கள் அதனைத் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் Duke-NUS மருத்துவக் கல்லூரியும், தொற்றுநோயைச் சமாளிக்கும் தயார்நிலைக்கானப் புத்தாக்கக் கூட்டணியும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

கிருமித் தொற்றைச் சமாளிப்பதற்கான வழிகளைக்  கண்டறிய அந்தக் கருத்தரங்கு உந்துதலாக இருக்குமென்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Nipah கிருமி பழ வௌவால்கள் மூலம் அதிகம் பரவுகிறது. பன்றிகள் மூலமும் அது பரவுவதுண்டு.

மனிதர்களிடயே, ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கோ, அசுத்தமான உணவு மூலமாகவோ அது பரவக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்