அமெரிக்காவை உலுக்கும் கடும் பனிப்பொழிவு - 100 வாகனங்கள் மோதி விபத்து
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலச் சாலைகள் கண்ணுக்குத் தெரியவில்லை....
அவற்றைக் கடும் பனி மூடியுள்ளது.
நெடுஞ்சாலையில் 30 முதல் 40 கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அவை மோதியதால் அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் சாலையிலிருந்து விலகிச் சறுக்கியதாக மாநிலக் காவல்துறை சொன்னது.
சுமார் 100 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
பலருக்குக் காயம்; ஆனால் உயிரிழப்பு இல்லை.
விபத்துக்குப் பிறகு சாலைகளைத் துப்புரவு செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன.
பல மணி நேரங்களுக்கு நெடுஞ்சாலை மூடப்பட்டது.
வானிலை மோசமாக இருக்கும்போது வேகத்தைக் குறைக்குமாறு அதிகாரிகள் வாகனமோட்டிகளை வலியுறுத்தினர்.
குளிர்காலப் புயல் தொடர்ந்து வட்டாரம் முழுவதும் பனிப்பொழிவை ஏற்படுத்தி வருகிறது. காற்றின் குளிர்ச்சி உட்பட தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழே 22 டிகிரி செல்ஸியல் வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிப்பொழிவு 35.5 செண்டிமீட்டர் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.