கத்தார் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி
This audio is generated by an AI tool.
கத்தாரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் மாண்டனர்.
மேலும் ஒருவரைக் காணவில்லை என்று AFP ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அந்த ஹெலிகாப்டர் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக இதற்கு முன்னர் தகவல் வந்தது.
விபத்துக்குத் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணம் என்று கத்தார் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
அந்த ஹெலிகாப்டர் எங்கே பயணம் செய்தது உள்ளிட்ட மேலும் பல விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.