Hello Kittyஐ உருவாக்கியவர் ஓய்வு
வாசிப்புநேரம் -
40 ஆண்டுக்கு மேலாக Hello Kitty கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்த வடிவமைப்பாளர் யுகோ யமாகுச்சி (Yuko Yamaguchi) ஓய்வுபெறுகிறார்.
1980 முதல் Hello Kittyஇன் தோற்றத்திற்குக் காரணமானவர்; கதாபாத்திரத்தின் புகழ் ஜப்பானைத் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலிக்க முக்கிய காரணமாக இருந்தவர் திருவாட்டி யமாகுச்சி.
அன்றாட வாழ்க்கையில் Hello Kitty போலவே ஆடை அணிந்து, சிகையலங்காரத்தை அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.
Hello Kitty ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கேட்டறிந்து, அதற்கேற்ப கதாபாத்திரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
பல தருணங்களில் உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி Hello Kittyயின் புகழைச் செதுக்கியவர் அவர்.
Hello Kitty கதாபாத்திரத்தை எப்போதுமே நிலைத்திருக்க வைக்கும் பொறுப்பைத் திருவாட்டி யமாகுச்சி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆதாரம் : AFP