Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Hershey சாக்லெட்டுகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் உலோக நுண்துகள்கள்

வாசிப்புநேரம் -
Hershey சாக்லெட்டுகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் உலோக நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சாக்லெட்டுகளிலிருந்து lead, cadmium ஆகியவற்றை நீக்குவதற்கு நிறுவனம் ஆராய்கிறது.

கடந்த ஆண்டு Hershey சாக்லெட்டுகள் சிலவற்றில் உலோக நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக
Consumer Reports எனும் லாப நோக்கமில்லாத பயனீட்டாளர் குழு அறிக்கை வெளியிட்டது.

Lily's extremely dark chocolate 85%, Special Dark mildly sweet chocolate, extra dark chocolate 70% ஆகியவை அடையாளம் காணப்பட்டன.

நாளொன்றுக்கு ஓர் அவுன்ஸு க்கு (ounce) அதிகமான சாக்லெட்டுகளைச் சாப்பிடுவோருக்கு அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.

மண்ணில் உலோக நுண்துகள்கள் இயற்கையாகவே உள்ளன என்றும் அவை சாக்லெட்டுகளிலும் இருக்கக்கூடும் என்றும் Hershey சொன்னது.

சாக்லெட்டுகளை உற்பத்தி செய்யும்போது கொக்கோ (cocoa) கொட்டைகளிலிருந்து உலோகத் துகள்கள் பெரும்பாலும் அகற்றப்படுகின்றன.

அவற்றை முற்றிலும் அகற்றுவது குறித்து இனி ஆராயப்படும் என்று நிறுவனம் கூறியது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்