Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

YouTubeஇல் ஆக அதிகமாகச் சம்பாதித்த நட்சத்திரம்

வாசிப்புநேரம் -

பாம்புகள் நிறைந்த குளியல் தொட்டியில் அமரும் சவால்....உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணி நேரம் இருக்கும் சவால்...

Squid Game எனும் பிரபலத் தென் கொரியத் தொடரில் இடம்பெற்ற விளையாட்டை நிஜ வாழ்க்கையில் நடத்துவது...

இப்படிப் பல்வேறு அதிரடிச் சாகசங்களை ஏற்றுநடத்தியுள்ளார் MrBeast என்ற 23 வயது YouTube நட்சத்திரம்.

அவர் கடந்த ஆண்டு 54 மில்லியன் டாலர் ஈட்டினார்.

அதுவே கடந்த ஆண்டு YouTube வழி பெறப்பட்ட ஆக அதிகமான சம்பளம் என்று Forbes செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு YouTube-இல் பதிவான ஆகப் பெரிய வருமானத்தைப் போன்று அந்தத் தொகை இரு மடங்கு.

வருமானத்திற்கு முக்கியக் காரணம், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே என்று Forbes சொன்னது.

கடந்த ஆண்டு MrBeast-இன் காணொளிகள் 10 பில்லியன் முறை பார்வையிடப்பட்டன.

அந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு.

இந்நிலையில், கடந்த ஈராண்டாக ஆக அதிக வருமானம் ஈட்டிய சிறுவன் ரயன் காஜி ( Ryan Kaji) பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் பட்டியலின் 7-ஆம் இடத்தில் உள்ளார்.

அவர் YouTubeஇன் மூலம் கடந்த ஆண்டு 29.5 மில்லியன் டாலர் ஈட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்