ஹார்வர்ட் மாணவர்களுக்கு உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஹாங்காங் கல்வியமைச்சர்

Joseph Prezioso/AFP
உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள் ஹார்வர்டில் படிக்கும் சீன மாணவர்களுக்கு உதவவேண்டும் என்று ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை ஐந்து பல்கலைகள் ஹார்வர்ட் மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறி டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அனைத்துலக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளத் தடை விதித்தது. அந்தத் தடையைத் தற்காலிகமாக அமெரிக்க நீதிபதி நிறுத்திவைத்திருக்கிறார். ஆனால் வெளிநாட்டு மாணவர்களிடையே அவர்கள் தங்குமிடம் குறித்த அச்சமும் குழப்பமும் நிலவுகின்றன.
இந்நிலையில் ஹார்வர்டில் படிக்கும் திறமைமிக்க மாணவர்களை ஹாங்காங்கிற்கு ஈர்க்கவேண்டும் என்று கல்வியமைச்சர் கிறிஸ்டின் சோய் (Christine Choi) கூறினார்.
ஹாங்காங் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் வெளிநாட்டு மாணவர்களை வரவேற்கத் தயாராவதாகக் கூறியிருக்கிறார். பல நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் உள்ளூர் மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும்போது புத்தாக்கத்திறன் மேம்படுவதாக அவர் கூறினார்.
மற்ற பல்கலைகளும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக அறிவிப்புகளைச் செய்திருக்கின்றன.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களில் 57 பேர் ஹாங்காங்கையும் 1,282 பேர் சீனாவையும் சேர்ந்தவர்கள்.