ஹாலிவுட்டை கதிகலங்க வைக்கும் சீன AI நிறுவனம்
வாசிப்புநேரம் -
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பிராட் பிட்டும் (Brad Pitt) டாம் குரூஸும் (Tom Cruise) கட்டடம் ஒன்றின் மேல் சண்டையிடும் காணொளி ஹாலிவுட்டைக் (Hollywood) கதிகலங்க வைத்துள்ளது.
பார்ப்பதற்குத் தத்துரூபமாகவுள்ள அந்த 15 விநாடிக் காணொளி புதிதாக அறிமுகம் கண்டுள்ள Seedance 2.0 எனும் AI தளத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது.
TikTok தளத்தை நிர்வகிக்கும் சீன நிறுவனம் ByteDanceதான் Seedance 2.0 தளத்தையும் உருவாக்கியுள்ளது.
இணையத்தில் தீயாகப் பரவி வரும் அந்தக் காணொளி அனுமதியின்றி உருவாக்கப்பட்டதாக ஹாலிவுட் குற்றஞ்சாட்டுகிறது.
அமெரிக்கத் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைப் பாதுகாக்கும் காப்புரிமைச் சட்டத்தை ByteDance மதிக்கத் தவறிவிட்டது என்று Motion Picture Associationஇன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
பிரபல ஹாலிவுட் திரைப்படம் Deadpoolஇன் கதாசிரியரும் தயாரிப்பாளருமான ரீட் ரீஸ் (Rhett Reese) அதிநவீன AI தளங்களால் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் வேலை பறிபோய்விடும் என்று பயமாகவுள்ளது என்றார்.
2025இல் டில்லி நொர்வுட் (Tilly Norwood) எனும் ஹாலிவுட்டின் முதல் AI நடிகை அறிமுகம் கண்டபோது அது அமெரிக்கத் திரை உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆதாரம் : AGENCIES