Skip to main content
ஹாங்காங் தீ: மாண்டோர் எண்ணிக்கை 159க்கு உயர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங் தீ: மாண்டோர் எண்ணிக்கை 159க்கு உயர்வு

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தீ: மாண்டோர் எண்ணிக்கை 159க்கு உயர்வு
படம்: AFP/Philip Fong
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங்கை கதிகலங்க வைத்த தீச்சம்பவத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 159க்கு உயர்ந்துள்ளது.

தீப்பற்றிய அனைத்துக் கட்டடங்களிலும் தேடல் பணிகள் முடிந்துள்ளன.

மாண்டோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மனித எலும்புகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்களைச் சோதனை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரம் புதன்கிழமை தாய் போ (Tai Po) வட்டாரத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்புப் பகுதியில் தீ மூண்டது.

மாண்டவர்களில் குறைந்தது 91 பேர் பெண்கள், 49 பேர் ஆண்கள்.

ஒரு வயதுக் குழந்தையும் தீயில் உயிரிழந்தது.

சுமார் 30 பேரைக் காணவில்லை.

தீச்சம்பவம் தொடர்பில் 21 பேரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்