ஹாங்காங் தீயில் உயிரிழந்த பணிப்பெண்கள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஹாங்காங் குடியிருப்புப் பேட்டையில் சென்ற வாரம் மூண்ட தீயில் 10 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் மாண்டனர்.
பலரை இன்னமும் காணவில்லை.
ஹாங்காங்கில் கிட்டத்தட்ட 370,000 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பணிப்பெண்கள் ஓய்வெடுப்பர். சென்ற ஞாயிற்றுக்கிழமை பல பணிப்பெண்கள் பாதிக்கப்பட்ட சகப் பணிப்பெண்களுக்குப் பிரார்த்தனை செய்யப் பொது இடங்களில் திரண்டனர்.

பிரார்த்தனையில் பங்கேற்ற பலர் பணிப்பெண்களின் சேவையைப் பாராட்டினர்.
குறிப்பாக, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ரொடோரா அல்கராஸ் (Rhodora Alcaraz) தன் முதலாளியின் 3 மாதக் குழந்தையைத் தீயிலிருந்து காப்பாற்றியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் தற்போது தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

ஒரு பிலிப்பினோ பணிப்பெண் தீயில் மாண்டார்.
ஏழு இந்தோனேசியப் பணிப்பெண்கள் மாண்டதாக இந்தோனேசியத் தூதரகம் தெரிவித்தது.
உயிரிழந்த பணிப்பெண்களின் குடும்பங்களுக்கு ஹாங்காங் அரசாங்கம் 200,000 ஹாங்காங் டாலர் (சுமார் 33,310வெள்ளி) நிதி வழங்குவதாக அறிவித்தது.
உயிர் பிழைத்தவர்களுக்கும் நிதி ஆதரவு தர வேண்டும் என்று குரல் எழுப்பப்படுகிறது.

ஆதாரம் : AFP