ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர் ஜோஷுவா வோங்கிற்கு 10 ஆண்டுச் சிறை
(கோப்புப் படம்: Alastair Pike / AFP)
This audio is generated by an AI tool.
ஹாங்காங்கில் பிரபல ஜனநாயக ஆர்வலர் ஜோஷுவா வோங்கிற்கு (Joshua Wong) 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டுச் சக்திகளுடன் சட்டவிரோதமாகச் கூட்டுச் சேர்ந்து நடந்ததாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
30 வயது வோங் ஏற்கனவே சுமார் 6 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்.
ஹாங்காங்கிற்கு ஜனநாயகம் கோரி நடந்த பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களின்போது அவர் உலகளவில் பிரபலமானார்.
முன்னாள் மாணவர் தலைவரான அவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அதிகாரத்தைக் கீழறுத்த குற்றத்திற்காக 4 ஆண்டு 8 மாதச் சிறைத்தண்டனை நிறைவேற்றி வந்தார்.
அவர் வரும் ஜனவரி மாதம் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதே சட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு ஜூன் மாதம் வோங் மீது ஹாங்காங் அதிகாரிகள் மீண்டும் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்தனர்.
இந்த ஆண்டு செப்டம்பரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
எனினும் வோங்கைத் தொடர்ந்து சிறையில் வைப்பதே புதிய குற்றச்சாட்டின் நோக்கம் என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.