சிங்கப்பூரில் பாதுகாவலர்களைத் திட்டிய ஹாங்காங் பள்ளி முதல்வர் வேலையிலிருந்து நீக்கம்
வாசிப்புநேரம் -
(படம்: Handout via South China Morning Post)
சிங்கப்பூரில் பாதுகாவல் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹாங்காங் உயர்நிலைப் பள்ளி முதல்வர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அவர் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
ஆனால் பள்ளி அதை ஏற்க மறுத்துவிட்டது.
அவரை வேலையைவிட்டு நீக்குவதாகப் பள்ளி தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு மாணவர்களோடு பயணம் மேற்கொண்டிருந்தபோது பள்ளி முதல்வர் லீ சொக்-ஹிங் (Lee Cheuk-hing) பாதுகாவல் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரது தரக்குறைவான நடத்தை ஹாங்காங் கல்வித்துறையின் நெறிமுறைக்கு ஏற்ப இல்லை என்று பள்ளி வெளியிட்ட அறிக்கை கூறியது.
அந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
தாம் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக் கேட்டுத் திரு லீ காணொளியைப் பதிவேற்றம் செய்தார்.

ஆதாரம் : CNA