5,000 பணிப்பெண்களுக்கு இலவச Disneyland நுழைவுச்சீட்டுகள்!
(படம்: AFP/Hector Retamal)
ஹாங்காங்கில் வேலை செய்யும் 5,000 பணிப்பெண்களுக்கு இலவச Disneyland உல்லாசத்தல நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
பணிப்பெண்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க லீ கா ஷிங் அறநிறுவனம் அதைச் செய்கிறது.
செய்தியை ஹாங்காங் ஊடகங்கள் வெளியிட்டன.
மார்ச் 29, ஏப்ரல் 12 தேதிகளில் அவர்கள் Disneyland தலத்துக்குச் செல்லலாம்.
நுழைவுச்சீட்டைத் தவிர அவர்களுக்கு இரண்டு வேளை உணவுக்கான பற்றுச்சீட்டுகளும் சிறப்புச் சிற்றுண்டியும் வழங்கப்படும்.
Disneyland தலத்துக்குச் செல்ல அவர்களுக்கு Octopus எனும் பொதுப் போக்குவரத்து அட்டையும் கொடுக்கப்படும்.
பணிப்பெண்களுக்கு இலவச Disneyland நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல.
சென்ற ஆண்டு லீ கா ஷிங் அறநிறுவனம் 4,200 பிலிப்பீன்ஸைச் சேர்ந்த பணிப்பெண்களுக்கு இலவச நுழைவுச்சீட்டுகளை வழங்கியது.
இவ்வாண்டுத் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, நேப்பாளம், தாய்லந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.