Skip to main content
ஹாங்காங் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங் தீ - சாரக்கட்டு வலைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள்

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தீ - சாரக்கட்டு வலைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள்
படம்: REUTERS/Lam Yik
வெளியீடு : 12 Dec 2025 11:00AM புதுப்பிப்பு : 12 Dec 2025 12:09PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சாரக்கட்டு வலைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது.

சாரக்கட்டு வலைகள் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

அதோடு வலைகள் பொருத்தப்பட்டவுடன் அரசாங்கம் முன்னறிவிப்பின்றி அவ்வப்போது சோதனைகளை நடத்தும்.

புதிய விதிமுறைகள் தற்போது நடக்கும் கட்டுமானத் திட்டங்களுக்கும் எதிர்காலத் திட்டங்களுக்கும் பொருந்தும்.

அண்மையில் ஹாங்காங்கில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் குறித்து நடந்த விசாரணையில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் பாதுகாப்பு ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு வந்துள்ளது.

புதிய முறை சுமுகமாக நடப்புக்கு வரும்வரை கட்டுமானத்துறை மன்றம் பாதுகாப்பான வலைகளின் கொள்முதலை ஒருங்கிணைக்கும் என்று வளர்ச்சிக்கான செயலாளர் பெர்னடெட் லின் (Bernadette Linn) தெரிவித்தார்.

தீயில் மாண்டோர் எண்ணிக்கை 160ஐ எட்டியுள்ளது.
2,000க்கும் மேலான குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 6 பேரைக் காணவில்லை.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்