உலகம் trending
ஜப்பான் திருவிழாவில் மிரண்டு பாய்ந்த குதிரையால் 6 பேர் காயம்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
கடிவாளமற்ற குதிரை...
அசுர வேகத்தில்...
குளம்புகள் பாய...மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
சொமா நாமாவி (soma nomaoi) திருவிழாவின்போது அந்த அசம்பாவிதம் நேர்ந்தது.
விழாவில் குதிரையின்மீது சவாரி செய்தவர் கீழே விழுந்ததும் குதிரை கட்டுப்பாட்டை இழந்தது.
பாதையைவிட்டு விலகிப் பார்வையாளர்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்குள் தலைதெறிக்க ஓடியது.
6 பேர் காயமடைந்தனர்.
மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தற்காப்புக் கலையையும் குதிரை ஓட்டும் திறனையும் வெளிக்காட்டுவதற்காக
ஜப்பானின் புக்குஷிமா (Fukushima) மாநிலத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுகிறது.
அதில் கிட்டத்தட்ட 40,000 பேர் கலந்துகொள்கின்றனர்.
சமுராய் (Samurai) உடை அணிந்து, கவசமிட்டக் குதிரையை ஓட்டும் பந்தயம், விழாவின் சிறப்பு அம்சம்.

ஆதாரம் : Mediacorp Seithi