Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமான விபத்தை நிகழ்த்தத் திட்டமிடும் விமானியைத் தடுக்க முடியுமா?

வாசிப்புநேரம் -
விமான விபத்தை நிகழ்த்தத் திட்டமிடும் விமானியைத் தடுக்க முடியுமா?

(படம்: Jack GUEZ / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அண்மையில் flydubai விமானத்தில் விமானி சக விமானியைத் தாக்கியதாகத் தெரிகிறது.

அவர் விமானத்தைத் தரையில் மோதத் திட்டமிட்டார் என்றும் நம்பப்படுகிறது.

வேண்டுமென்றே விமான விபத்தை நிகழ்த்தத் திட்டமிடும் விமானிகளைத் தடுக்க முடியுமா?

என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

பயணிகள் ஆபத்தான பொருள்களை விமானத்தில் எடுத்துச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்யப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

அந்தப் பாதுகாப்புச் சோதனை விமானிகள், சிப்பந்திகள் ஆகியோருக்கும் பொருந்தும்.

சில விமான நிலையங்களில் அவர்கள் பயணிகளுடன் சேர்ந்து பாதுகாப்புச் சோதனையைக் கடக்கவேண்டும்.

வேறுசில விமான நிலையங்களில் விமானிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் தனி வரிசை ஒதுக்கப்படும்.

விமானி வழக்கத்திற்கு மாறாகப் பதற்றமாக இருக்கிறாரா, போதையில் இருக்கிறாரா என்பதைக் கண்டறியவும் சோதனை உதவும்.

விமானிகள் உலோகப் பொருள்களை வைத்திருக்கிறார்களா என்றும் சோதிக்கப்படும்.

அவர்கள் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகள் எக்ஸ்-ரே சோதனைக்கு உட்படுத்தப்படும்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு விமானி அறையின் (Cockpit) பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவந்தால் விமானிகள் விமானி அறையின் கதவைப் பூட்டலாம்.

எனினும் flydubai சம்பவத்தைப் போல விமானி அறைக்குள் அச்சுறுத்தல் ஏற்படுவது அரிதினும் அரிது.

விமானி ஆபத்து விளைவிக்கக்கூடியவர் அல்ல என்பதை உறுதிசெய்வதே ஆகப் பெரிய சவால்.

அறிகுறிகள் தென்படாதபோது அச்சுறுத்தலைக் கண்டறிவது சிரமம்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்