Skip to main content
எண்ணெய் விலை உயர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எண்ணெய் விலை உயர்வு - சமாளிக்க வழி தேடும் ஆசிய நாடுகள்

வாசிப்புநேரம் -
ஈரான் போர்ச்சூழல் காரணமாக உலக நாடுகளில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, Brent எனும் உலகின் முக்கிய கச்சா எண்ணெயின் விலை சற்றுக் குறைந்துள்ளது.

குறிப்பு: கச்சா எண்ணெய் விலைக்கான அனைத்துலகத் தரமாக Brentஇன் விலை கருதப்படுகிறது
சுருக்கமாகப் பார்க்க


அது இன்று பீப்பாய்க்கு 86.63 டாலராக விற்கப்படுகிறது.

ஆனால் நேற்று கடைசியாக அதன் விலை பீப்பாய்க்கு 91.70 டாலராகப் பதிவானது.

இன்றைய விலையுடன் ஒப்பிட்டால் அது 5 டாலர் அதிகம்.

கச்சா எண்ணெயின் விலை இப்படி நிலையற்று இருப்பதால் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதுகாக்க ஆசிய நாடுகள் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அவற்றைப் பட்டியலிட்டது 'செய்தி'.

இந்தியா
📌கடலில் சிக்கியிருக்கும் கச்சா எண்ணெயை விற்க ரஷ்யாவுக்கு விதித்திருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

📌இதனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.

பங்களாதேஷ்
📌பங்களாதேஷில் பங்கீட்டு முறையில் எண்ணெய் வழங்கப்படுகிறது.

📌இதனால் பெட்ரோல் நிலையங்களில் வாகனமோட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மலேசியா
📌எண்ணெய் உற்பத்தி நாடாக இருப்பதால் மலேசியாவில் பாதிப்புகள் கடுமையாக இருக்காது என்று அங்குள்ள நிபுணர்கள் நம்புகின்றனர்.

தென்கொரியா
📌கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக உள்நாட்டு எரிபொருள் விலை வரம்பைத் தென்கொரியா கொண்டுவந்துள்ளது.

சீனா
📌டீசல், பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு தனது முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சீனா உத்தரவிட்டுள்ளது.

📌உள்நாட்டுத் தேவைக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஜப்பான்
📌கையிருப்பிலுள்ள கச்சா எண்ணெயைச் சந்தையில் விடப் பணம் செலுத்துமாறு தேசிய எண்ணெய் இருப்புச் சேமிப்புத் தளத்துக்கு (National Oil Reserves) அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியா
📌வாகனமோட்டிகளுக்குப் பெரிய சிக்கல்கள் இல்லை.

📌எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கமே ஏற்கவுள்ளது.

தாய்லந்து
📌சமையல் எரிவாயு விலைகளை அப்படியே வைத்திருக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

📌எரிசக்தித் தேவைகளைத் தன்னால் கையாள முடியும் என்கிறது.

பிலிப்பின்ஸ்
📌எரிபொருள் விலை படிப்படியாக உயர்த்தப்படுகிறது.

📌விலை இன்னும் உயரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஆசிய நாடுகள் 3 நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன.

அவை:
1. கையிருப்பு/சேமித்து வைப்பது (Stockpiles)

2. மாற்று வழியைக் கையாள்வது (Re-routing)

3. பங்கீட்டு முறை (Rationing)

ஒருவேளை ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து தொடர்ந்து முடங்கினால், இந்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் நிலை வரலாம்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்