Skip to main content
ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான்-அமெரிக்கா சந்திப்பு: பாகிஸ்தான் எப்படி சாதித்தது?

வாசிப்புநேரம் -
ஈரான்-அமெரிக்கா சந்திப்பு: பாகிஸ்தான் எப்படி சாதித்தது?

படம்: REUTERS/Hasnoor Hussain

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க-ஈரான் சண்டைநிறுத்தம் இன்னமும் உறுதியாகவில்லை. 

அது பலவீனமாகவே உள்ளது. எந்நேரத்திலும் உடைந்துவிடலாம். 

ஆனாலும்கூட இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அரசதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. 

இந்த அளவுக்குப் பாகிஸ்தானுக்குத் திறன் இல்லை என்று சொன்னவர்கள் மூக்கில் விரல் வைக்கின்றனர்.   

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முக்கிய இணைப்புப் பாலமாக வந்துவிட்டது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் இதை எப்படி சாத்தியமாக்கியது? 

பாகிஸ்தான்-ஈரான் உறவு

🤝 ஈரானுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆகப்பெரிய ஷியா முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட நாடு பாகிஸ்தான்.

🤝 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற போது பாகிஸ்தானை அங்கீகரித்த முதல் நாடு ஈரான். 

🤝 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானுக்குப் பாகிஸ்தான் அதே அங்கீகாரத்தைக் கொடுத்தது. 

🤝 ஈரானுக்கு அமெரிக்காவில் தூதரகம் இல்லை. அரசதந்திர நலனைப் பாகிஸ்தான் கவனிக்கிறது. 

அமெரிக்க-பாகிஸ்தான் நட்பு

🤝 ஈரானைவிடவும் அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கு நட்பு அதிகம். 

🤝 நேட்டோ கூட்டணிக்கு அப்பால் அமெரிக்காவுக்கு எப்போதுமே நெருங்கிய நண்பன் பாகிஸ்தான். 

🤝 9/11 சம்பவத்துக்குப் பிறகு உறவில் கசப்பு வந்தது. தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.  

🤝2011இல் ஒசாமா பின் லாடனை பாகிஸ்தானிடம் சொல்லாமல் அமெரிக்கா கொன்றபோது சிக்கல் மோசமானது. 

🤝அதிபர் டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவிக்கு வந்தபோது அவருக்கு அமைதிக்கான நொபெல் பரிசு தர வேண்டும் என்று பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் சொல்லி நெருக்கத்தை உருவாக்கினார்.

வட்டாரத்தில் நட்புக்கரம்

🤝 பாகிஸ்தான் அண்மையில் சவுதி அரேபியா, துருக்கியே, எகிப்து ஆகிய நாடுகளைச் சந்தித்துப் பேசியது. புதிய நால்வர் அணி உருவாகி வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் கூறின. இதுவும் பாகிஸ்தானின் கரத்தை வலுப்படுத்தியது.

🤝சீனாவுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் உறவும் உதவியது. சீனா எப்போதுமே ஈரானின் நட்பு நாடு. 

இனி என்ன?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை மறுநாள் (11 ஏப்ரல்) பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையாகப் போர் நின்றால் அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அரசதந்திர வெற்றியாக அமையலாம். 

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்