Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

"அனைவரும் தேசிய கீதத்தை ஒன்றுகூடிப் பாடும்போது மெய்சிலிர்க்கும்" - வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் தேசிய தினக் கொண்டாட்டம்

வாசிப்புநேரம் -
"அனைவரும் தேசிய கீதத்தை ஒன்றுகூடிப் பாடும்போது மெய்சிலிர்க்கும்" - வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் தேசிய தினக் கொண்டாட்டம்

தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டு வாகன அணிக்கான ஒத்திகைகள் நடக்கவுள்ளன. அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த விவரங்களை சிங்கப்பூர் போலீஸ் படை வெளியிட்டுள்ளது. (படம்: Ernest Chua)

"சிங்கப்பூர் என் நாடு... எனது வீடு... என்ற உணர்வு வேறொரு நாட்டில் இருக்கும்போது வலுவடைகிறது," என்றார் துபாயில் வசிக்கும் சிங்கப்பூரர் லான்யா எஸ்ரா அசோகன்.

சிங்கப்பூரில் தற்போது வசிக்கவில்லை என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினம் வரும்போது அதை துபாயில் இருக்கும் தமது குடும்பத்தினரோடும் மற்ற சிங்கப்பூரர்களோடும் கொண்டாடுவதாகக் கூறினார் அவர்.
(படம்: Old Chang Kee London)
அவரைப் போலவே தேசிய தினத்தைக் கொண்டாடத் திட்டமிட்டார் லண்டனில் வசிக்கும் சிங்கப்பூரர் அமலா பிள்ளை. ஆனால் ஹேரோ (Harrow) பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு வசிக்கும் சீனர்களும் இந்தியர்களும் வீட்டைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்ப்பதாகக் கூறினார் அவர்.

"என் நண்பர்களுடன் சேர்ந்து சிவப்பு வெள்ளை ஆடைகளை அணிந்து Old Chang Kee உணவகத்தில் உண்ணத் திட்டமிட்டிருந்தேன். கலவரம் காரணமாக இவ்வாண்டு நினைத்தபடி கொண்டாட முடியவில்லை," என்றார் அமலா.
(படம்: Instagram)
சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டதில் அனைவரும் ஒன்றுகூடி தேசிய கீதத்தைப் பாடும் தருணம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒன்று என்று கூறினார் ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரில் வசிக்கும் சிங்கப்பூரர் கிரிஷான் பிரகாஷ்.

"பெர்த்தில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகம். நம் நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் நாட்டுக்காக அனைவரும் ஒன்றாக இணையும் தருணம் என் மனத்தில் என்றென்றும் நிற்கும்," என்றார் அவர்.
(படம்: 'செய்தி' நேயர்)
அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரில் வசிக்கும் சிங்கப்பூர் 'செய்தி' நேயர், தேசிய தினக் கொண்டாட்டத்தில் சிங்கப்பூர் உணவை உண்பதை ரசித்துக் கொண்டாடுகிறார்.

இவ்வாண்டின் கொண்டாட்டத்தில் McDonald's உணவகத்தின் Garlic Chilli Sauce பொட்டலம் தரப்பட்டது. சிங்கப்பூரில் இருப்பதைப் போன்ற உணர்வை அது கொடுத்ததாக அவர் சொன்னார்.
(படம்: சுந்தரி ராஜா)
ஒவ்வோர் ஆண்டும் வெளியூருக்குச் சென்று சிங்கப்பூரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது சிங்கப்பூரர் சுந்தரி ராஜாவின் வழக்கம்.
(படம்: சுந்தரி ராஜா)
அதேபோல இவ்வாண்டு அவரையும் சேர்த்து 83 சிங்கப்பூரர்கள் கொண்ட குழு ஜப்பானுக்குச் சென்றது. சிங்கப்பூருக்குப் பிறந்தநாள் பாட்டுப் பாடி, கேக் வெட்டி, அனைவரும் சிவப்பு, வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொண்டாடினர்.
(படம்: சுந்தரி ராஜா)
ஜப்பானில் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் தமது நாட்டின் தேசிய தினத்தை விமரிசையாகக் கொண்டாடியதை எண்ணி மகிழ்வதாகச் சொன்னார் அவர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்