Skip to main content
மூளையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளனவா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மூளையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளனவா?

வாசிப்புநேரம் -
நம் உடல் முழுவதும் பல பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வரும் ஆய்வின் முடிவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.

மனித உடல் உறுப்புகள், ரத்தம், மூளையில்கூட அவை உள்ளன என்று அவை கூறுகின்றன.

ஆனால் சில ஆய்வுகளை விஞ்ஞானிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

குறிப்பாக இறந்த உடலின் மூளையில் ஒரு ஸ்பூன் அளவு நுண்துகள்கள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆய்வுக்கூடங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் மாசு ஏற்பட்டிருக்கலாம் அல்லது சில சோதனை வழிமுறைகள் மனிதத் திசுக்களை பிளாஸ்டிக் என தவறாகக் குறிப்பிடலாம் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தச் சர்ச்சையைத் தீர்க்க பிளாஸ்டிக் நுண்துகள்கள் பற்றிய ஆய்வுக்காகப் புதிய கட்டமைப்பை அமைக்கலாம் என 20 ஆய்வுக் கழகங்களைச் சேர்ந்த 30 விஞ்ஞானிகள் முன்மொழிகின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் நுண்துகள்கள் உலகெங்கும் நிறைந்துள்ளன என்பதை யாரும் மறுக்கவிலை.

காற்று, உணவு மூலம் மனிதர்கள் உள்வாங்கும் சாத்தியம் மிகவும் அதிகம் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆனால் அதனால் மனித உடலுக்குத் தீங்கு ஏற்படுமா என்பதில் இன்னும் போதிய ஆதாரம் இல்லை.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்